TA

ஜும்பா லஹிரி

article - ஜும்பா லஹிரி

ஜும்பா லஹிரி” நிலஞ்சன சுதேஷ்ன ஜும்பா லஹிரி (வங்காளம்: பிறப்பு: ஜுலை 11,1967) ஒரு அமெரிக்க எழுத்தாளர். சிறுகதை புலமைக்கான 29வது மலமுது விருதினைப்பெற்றுள்ளார். “இண்டெர்ப்ரெட்டர் ஆஃப் மாலடிஸ்” (1999) என்ற இவரது முதல் சிறுகதை தொகுப்பிற்கு 2000ஆம் ஆண்டிற்கான புலிட்ஃசர் பரிசு வழங்கப்பட்டது. ”தி நேம்சேக்” என்ற முதல் நாவல்(2003) திரைப்படமாக்கப்பட்டது. இவரது ”தி லோலண்ட்” என்ற புத்தகம் மிக உயரிய விருதான புக்கர் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டது. லஹிரி தற்பொழுது ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

ஜும்பா லஹிரி

தொழில் எழுத்தாளர்
நாடு அமெரிக்கன்
கல்வி நிலையம்
  • பர்னாட் கல்லூரி, கொலம்பியா பல்கலைக்கழகம்
  • பாசுடன் பல்கலைக்கழகம்
இலக்கிய வகை புதினம், சிறுகதை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
  • இன்டர்ப்ரீட்ர் ஒப் மலேடிஸ் (1999)
  • த நமேசேக் (புதினம்)
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
www.randomhouse.com/kvpa/jhumpalahiri/

. . . ஜும்பா லஹிரி . . .

லஹிரி மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த வங்காள இந்தியர்களின் மகளாவார். இவர் இலண்டனில் பிறந்தார். அவருக்கு மூன்று வயதாக இருந்தபோது அவரது குடும்பம் அமெரிக்காவுக்குச் குடியேறியது. லஹிரி ரோட் தீவின் கிங்ஸ்டனில் வளர்ந்தார். அவரது தந்தை அமர் ரோட் தீவின் பல்கலைக்கழகத்தில் நூலகராக பணிபுரிகிறார்.[1] லஹிரியின் தாயார் தனது குழந்தைகள் வங்காள பாரம்பரியத்தை அறிந்து வளர வேண்டும் என்று விரும்பியதால் அவரது குடும்பத்தினர் கல்கத்தாவில் உள்ள உறவினர்களை அடிக்கடி சந்தித்தனர்.[2] லஹிரி தென் கிங்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1989 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பர்னாட் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[3] பின்னர் பாஸ்டன் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், படைப்பு எழுத்தில் எம்.எஃப்.ஏ, ஒப்பீட்டு இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் மற்றும் மறுமலர்ச்சி ஆய்வுகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். லஹிரி பாஸ்டன் பல்கலைக்கழகத்திலும், ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஒப் டிசைனில் படைப்பு எழுத்தை கற்பித்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பீடத்தில் லூயிஸ் சென்டர் ஃபார் ஆர்ட்ஸில் படைப்பு எழுத்தில் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.[4]

. . . ஜும்பா லஹிரி . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . ஜும்பா லஹிரி . . .

Back To Top