தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamil Nadu Teachers Recruitment Board) என்பது ஒரு தமிழ்நாடு அரசு நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின்நுங்கம்பாக்கம் பகுதியில் கல்லூரி சாலையில்[1] உள்ள டிபிஐ வளாகத்தின் நான்காவது மற்றும் பதினோறாவது தளத்தில் இது அமைந்துள்ளது.

. . . தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் . . .
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டுவரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி [2][3] வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக இவ்வாரியம் செயல்பட்டு வருகிறது.
இந்திய அரசின்மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்தும் முகமையாக இயங்கி வருகிறது.[4] முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு[5] நடத்தப்படும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
- ஆசிரியர் தகுதி தேர்வு
- முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு [6]
- உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தேர்வு [3]
. . . தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் . . .