TA

தயோல்

கரிம வேதியியலில்  thiol தயோல் (/ˈθɔːl//ˈθɔːl/, /ˈθɒl//ˈθɒl/)[1] ஒரு கரிமகந்தகச் சேர்மம். இதில் கார்பன்- பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட கந்தகஐதரைல் தொகுதியில் (ஆர்–எஸ். எச்) (இங்கு, ஆர் அல்கைல் தொகுதி  அல்லது பிற கரிம பதிலிகளைக் குறிக்கிறது). தயோலில்  உள்ள கந்தகம்  மதுசாரம் (ஆல்ககால்) ஒத்துள்ளது.(ஆல்ககாலில் உள்ள ஐதராக்சில் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் இருக்கும் இடத்தில் கந்தகம் உள்ளது. கிரேக்க மொழியில்”தயோன்” + “ஆல்ககால்,” இவற்றின் முதல் வார்த்தை  இருந்து தயோல்  என்ற வார்த்தை பெறப்பட்டுள்ளது. கிரேக்கம் θεῖον (theion) = “கந்தகம்”.[2] –எஸ். எச் உள்ள வினைபடு தொகுதியாக தயோல் தொகுதி அல்லது கந்தகஐதராக்சில் தொகுதி குறிக்கப்படுகிறது.

தயோல் ஒரு  கந்தகஐதரைல் தொகுதி.

பல தயோல்கள் அடர்த்தியான வாசனை உடையவை. பூண்டு அல்லது அழுகிய முட்டைகளின் வாசனையைக் கொண்டுள்ளன. தயோல்கள், இயற்கை எரிவாயுவைக் (இது தூய வடிவில் மணமற்றதாக உள்ளது) கண்டறிய பயன்படுகிறது. தயோல்கள் சில நேரங்களில் மெர்காப்டன்கள் என குறிப்பிடப்படுகிறது .[3][4] மெர்காப்டன் என்ற வார்த்தை 1832 /mərˈகேæptæn//mərˈkæptæn/[5] இல் வில்லியம் கிறிஸ்டோபர் செய்சி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.தயோலேட் தொகுதிகள் , மெர்குரி சேர்மங்களுடன் வலுவான பிணைப்பினால் பிணைக்கப்பட்டுள்ளது. லத்தீன் மொழியில் mercurium captāns (மெர்குரியைக் கைப்பற்றுதல்)[6] என்ற வார்த்தையில் இருந்து மெர்காப்படன் என்ற வார்த்தை பெறப்பட்டுள்ளது.[7]

. . . தயோல் . . .

தயோல் மற்றும் ஆல்ககால் இரண்டும் ஒத்தவையாக உள்ளன. ஏனெனில் ஆக்சிசனை விட கந்தகம் பெரிய தனிமம். இங்கு,, C–S பிணைப்பு நீளங்கள், பொதுவாக சுமார் 180 பைக்கோ மீட்டர்.  C–O பிணைப்பு நீளம் சுமார் 40 பைக்கோ மீட்டர். C–S–H தொகுதி, 90° கோணத்தில் உள்ளன. அதேசமயம்  C-O-H தொகுதி விரிந்து காணப்படுகிறது. திட அல்லது திரவ நிலைகளில் தயோல்கள் தனது தொகுதிகளில் வலு குறைந்த ஹைட்ரஜன் பிணைப்பு பெற்றுள்ளன.

O-H பிணைப்புடன் ஒப்பிடுகையில் S-H  பிணைப்பு வலு குறைந்த பிணைப்பை பெற்றுள்ளது. ஏனனெனில், இதற்கு பிணைப்பின் பிரிகை ஆற்றலே காரணமாகும்(BDE).  CH3S-H,  ன் BDE 366 kj/mol ஆக உள்ள போது CH3O-H ன், BDE 440 kj/mol ஆக உள்ளது.[8]

கந்தகம் மற்றும் ஐதரசனின் மின்னெதிர்தன்மையில் உள்ள சிறிய வேறுபாடு காரணமாக S–H பிணைப்பு முனைவுத்தன்மை உடையதாக உள்ளது. இதற்கு மாறாக, ஐதராக்சில் தொகுதியில் உள்ள O-H பிணைப்புகள் அதிகளவு முனைவுத்தன்மையைப் பெற்றுள்ளன.  மேலும், ஆல்ககாலை விட குறைந்த அளவு இருமுனைத்திருப்புத்திறனைப் பெற்றுள்ளன.

அல்கைல்தயோல்களுக்குப் பெயரிட பல வழிகள் உள்ளன .

  • பின்னொட்டு – (alkane) அல்கேனின் பெருக்குப் பின்னொட்டாக (thiol) என்ற பெயர் சேர்க்கப்படுகிறது. இது  கிட்டத்தட்ட ஆல்ககால் பெயரிடும் முறையை ஒத்து காணப்படுகிறது. இதுவே IUPAC முறையிலும் பின்பற்றப்படுகிறது. உதாரணம்: CH3SH என்பது methanethiol (மீத்தேன்தயோல்) என்று குறிப்பிடப்படுகிறது.
  • ஆல்ககால் சேர்மத்தில் உள்ள ஆல்ககால் என்ற வார்த்தைக்குப் பதிலாக தயோலில் மெர்காப்டன் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது.. .உதாரணம்:  CH3O-H என்பது மெத்தில் ஆல்ககால் என்றும் CH3SH என்றபது மெத்தில் மெர்காப்டன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • sulfanyl (சல்பனைல்) அல்லது mercapto (மெர்காப்டோ) என்ற வார்த்தை முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.  முன்னொட்டு. உதாரணம்: மெர்காப்டோபியுரின் (mercaptopurine).

. . . தயோல் . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . தயோல் . . .

Back To Top